Home Featured நாடு இரண்டு நாள் காவலுக்குப் பிறகு அலி திஞ்சு பிணையில் விடுதலை!

இரண்டு நாள் காவலுக்குப் பிறகு அலி திஞ்சு பிணையில் விடுதலை!

640
0
SHARE
Ad

ali-tinjuகோலாலம்பூர் – கடந்த வாரம் கோத்தா ராயா வணிக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட மொகமட் அலி பகாரோம் என்ற அலி திஞ்சு, இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

டாங் வாங்கி மாவட்ட துணைத் தலைமைக் கண்காணிப்பாளர் ஹபிபி மஜினிஜி கூறுகையில், காவல்துறை அலி திஞ்சுவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-ன் கீழ் அவர் டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில் வைக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டார்” என நேற்று ஹபிபி விடுத்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice