Home Featured கலையுலகம் “என் மகன் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்” – சிம்புவின் தாய் கதறல்!

“என் மகன் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்” – சிம்புவின் தாய் கதறல்!

546
0
SHARE
Ad

சென்னை – பீப் பாடல் சர்ச்சை நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது சிம்புவைக் காவல்துறை வலை வீசித் தேடி அளவிற்கு சென்றுவிட்டது.

இது குறித்து ஏற்கனவே சிம்புவின் தந்தையும், நடிகருமான டி.ராஜேந்தர் விளக்கக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று குறள் டிவி வாயிலாக சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

சிறுவயது முதலே எப்போதும் பாட்டு, டான்ஸ் என்று மிகவும் சுட்டித் தனமாக இருப்பவர் சிம்பு என்றும், அவர் விளையாட்டுத்தனமாக எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை யாரோ திருடி அதை வெளியிட்டுவிட்டார்கள் என்றும் உஷா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த விவகாரத்தில் சிம்பு மீது காவல்துறையில் புகார்கள் கொடுக்கப்பட்டது முதல் வீட்டு வாசலில் 24 மணி நேரமும் கேமராவும், கையுமாக எத்தனையோ பேர் நின்று கொண்டிருப்பதாகவும், இதனால் தாங்கள் நிம்மதியிழந்திருப்பதாகவும் உஷா தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் சிம்புவின் பிரச்சனையைப் பெரிது படுத்துவதை விட்டுவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, உடுத்த மாற்றுத் துணி கூட இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு எதையாவது உபயோகமாகச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொளியில், உச்சக்கட்டமாக கதறி அழுகும் உஷா ராஜேந்தர், “அப்படி என்ன குற்றம் செய்துவிட்டான் என் மகன்? சிம்புவின் உயிர் வேண்டுமா? எடுத்துக்கங்க. இல்ல என் உயிர் வேண்டுமா? எடுத்துங்கங்க. ஒருத்தரு சொல்றாரு அவனைத் தூக்குல போடணுமா.. அந்தப் பையன வளர்த்ததுக்கு என்னைத் தூக்குல போடுங்க. என்னங்க நாடு இது.. இந்தத் தமிழ்நாடே எங்களுக்கு வேணாங்க” என்று கண்ணீருடன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=eOySIgclNME