Home Featured நாடு கோத்தா ராயா கைகலப்பு தொடர்பில் அலி திஞ்சு கைது செய்யப்பட்டார்!

கோத்தா ராயா கைகலப்பு தொடர்பில் அலி திஞ்சு கைது செய்யப்பட்டார்!

922
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த காலங்களில் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்துள்ள அலி திஞ்சு என அழைக்கப்படும் முகமட் அலி பகாரோம், கடந்த வாரம் தலைநகர் கோத்தா ராயா வணிக வளாகத்தில் நடைபெற்ற கைகலப்புகள் தொடர்பில் நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ali-tinjuடாங் வாங்கி காவல் நிலையத்தில் நேற்று மாலை 7 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் காவல் நிலையத்தின் காவல் துறைத் துணைத் தலைவர் ஹபிபி மஞ்சிஜி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா ராயா வணிக வளாகத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய அலி திஞ்சு அங்குள்ள வணிகர்களுக்கு ‘ஒரு பாடம் கற்பிப்பதற்காக’ அங்கு விற்பனைக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அங்கு கைகலப்புகள் ஏற்பட்டன.

அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதாகவும் அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

தனக்கு எதிரான புகார்களையும், கைகலப்புகளையும் அலி திஞ்சு மறுத்துள்ளார்.

ஒரு வாடிக்கையாளர் கோத்தா ராயா வணிக வளாகத்தில் கைத்தொலைபேசி ஒன்றை வாங்க முற்பட்டபோது, சில கைத்தொலைபேசிகளை வாங்க மறுத்ததைத் தொடர்ந்து அங்குள்ள விற்பனையாளர் ஒருவரால் நான்கு மணி நேரங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது.

கடை விற்பனையாளர் ஒருவர் நான்கு கைத்தொலைபேசிகளுக்கு 800 ரிங்கிட் என முதலில் கூறியதாகவும் பின்னர் அவற்றின் விலை 10,000 ரிங்கிட் எனக் கூறியதாகவும் அந்த வாடிக்கையாளர் புகார் கூறியிருந்தார்.

5,000 ரிங்கிட் செலுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் வாடிக்கையாளர்களுக்கான புகார் விசாரணை மையம் தலையிட்டு அந்தப் பணத்தை வாடிக்கையாளருக்குத் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது. வாடிக்கையாளரும் சம்பந்தப்பட்ட கைத்தொலைபேசிகளைத் திருப்பிக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்தே அலி திஞ்சு போராட்டத்தில் இறங்கினார் என்று கூறப்படுவதாக மலேசியாகினி செய்தி தெரிவிக்கின்றது.