Home Featured நாடு “நல்ல பெயரை மீட்டெடுக்க விடுப்பில் செல்லுங்கள்” – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

“நல்ல பெயரை மீட்டெடுக்க விடுப்பில் செல்லுங்கள்” – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

616
0
SHARE
Ad

najib3கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் விசாரணை முடியும் வரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், விடுப்பில் செல்வது நல்லது என்றும், அது தான் இஸ்லாமின் மரியாதையைக் காப்பாற்ற ஒரே வழி என்றும் பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

“ஆளும் அரசாங்கத்தில் இருக்கும் அம்னோவிற்கு நான் சில பரிந்துரைகளை முன்வைக்கிறேன், மலேசியா மற்றும் இஸ்லாமின் கௌரவத்தைக் காப்பாற்ற முதல் படியாக சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.” என்று துவான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதன் படி, அவரின் முதல் பரிந்துரையாக, 1எம்டிபி விவகாரத்தில் பொதுக் கணக்கு குழு மற்றும் கணக்காய்வாளர்கள் விசாரணை செய்து அறிக்கைகளை வெளியிடும் வரை அம்னோ தலைவர் நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“விசாரணை நடுநிலையாக நடைபெற்று, அம்னோ தலைவர் தனது பெயரையும், மலேசியா மற்றும் இஸ்லாமின் நற்பெயரையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியம்.”

“அடுத்த பரிந்துரையாக, பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இரத்து செய்ய வேண்டும். காரணம் இஸ்லாமில் மிகவும் ஏழைகளும் வரிப் பணம் கட்டுகிறார்கள்”

 

“அரசாங்கப் பணம் வீணாவதைக் குறைக்க வேண்டும் மற்றும் அண்மைய கணக்கு அறிக்கையை முன்வைத்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று துவான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.