Home Slider உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் ஒபாமா, ஏழாவது இடத்தில் மோடி! 

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: முதலிடத்தில் ஒபாமா, ஏழாவது இடத்தில் மோடி! 

699
0
SHARE
Ad

Modi and Obama at talksலண்டன் – உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் தலைவர்களின் பட்டியலை சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஓ.ஆர்.பி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, உலக அளவில் பிரபலமாக இருக்கும் தலைவர்கள் யார் யார்? என்பது பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் அடிப்படையில் வெளியாகி உள்ள பட்டியலில், அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம் பெற்றுள்ளார். அவரை பிடித்திருப்பதாக 59 சதவீதம் பேரும், அவரை விரும்பவில்லை என்று 29 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், மூன்றாவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, 4-வது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தும், 5-வது இடத்தில் ரஷ்ய அதிபர் புதினும், 6-வது இடத்தில், சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. அவரை ஆதரித்து 24 சதவீதம் பேரும், அவரை விரும்பவில்லை என 20 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.