Home Featured உலகம் மோடிக்கு புதின் அளித்த விலைமதிக்க முடியாத பரிசு! 

மோடிக்கு புதின் அளித்த விலைமதிக்க முடியாத பரிசு! 

480
0
SHARE
Ad

putin-modiமாஸ்கோ – அரசு ரீதியான சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதின் அளித்த விருந்தில் மோடி கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும் புதின், மோடிக்கு மகாத்மா காந்தி தனது நாட்குறிப்பில் (டைரி), தனது கைப்பட எழுதிய ஒரு பக்கத்தையும், வங்காளத்தில் தயாரான 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாளையும் பரிசளித்துள்ளார். அந்த வாள், நஜாஃபி வம்சத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை மதிக்க முடியாத இந்த பரிசுகளை அளித்ததற்காக மோடி, புதினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

putinஇரு நாடுகளின் உறவினை பலப்படுத்தும் நோக்கத்தில், கூடுதல் அக்கறை செலுத்தி வரும் இரு தலைவர்களும், இந்தியா-ரஷ்யா இடையே, இராணுவம், அணுசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திட இருப்பதாகக் கூறப்படுகிறது.