Home Featured கலையுலகம் முக்கிய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை – சிம்பு தப்பி விடுவாராம்!

முக்கிய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை – சிம்பு தப்பி விடுவாராம்!

551
0
SHARE
Ad

simbu_சென்னை – பீப் பாடல் விவகாரத்தில், சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், 5 தனிப்படைகளை அமைத்து பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு காவல்துறையினர் எச்சரித்து இருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், சிம்புவின் கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) முடக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.