Home Slider விஜயகாந்துடனான எங்களின் சந்திப்பால் கருணாநிதி கலக்கம் – வைகோ பேட்டி!

விஜயகாந்துடனான எங்களின் சந்திப்பால் கருணாநிதி கலக்கம் – வைகோ பேட்டி!

525
0
SHARE
Ad

karunanidhi-vaikoசென்னை –  மக்கள் நலக் கூட்டணியினர் நேற்று விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசிய அடுத்த சில மணி நேரங்களில், திமுக தலைவர் கருணாநிதி, தங்கள் கூட்டணி விஜயகாந்த் வரவேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக, வைகோ பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் மதியம் விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம். அடுத்த 3 மணி நேரத்துக்குள் திமுக  தலைவரும் அழைப்பு விடுத்து உள்ளார்.”

“நாங்கள் விஜயகாந்தை அழைத்தது அவருக்கு கலக்கத்தை உருவாக்கி உள்ளது. நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் விஜயகாந்தை அழைக்க வேண்டுமா? அதற்கு முன்பே அழைத்திருக்கலாமே? கலைஞர், விஜயகாந்தை அழைத்ததற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதுகுறித்து விஜயகாந்த்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், இதுவரை விஜயகாந்த் கூட்டணி குறித்து வாய்திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.