வாஷிங்டன் – அண்மையில் நடைபெற்ற உலக அழகி 2015 போட்டியில், அறிவிப்பாளர் ஸ்டீவ் ஹார்வேயின் தவறான அறிவிப்பால், உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் பட்டம் பறிக்கப்பட்ட மிஸ் கொலம்பியா அழகி அட்ரியாட்னா கூடிரர்ஸ் மீது தான் தற்போது உலகின் பிரபல நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ளது.
உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்ட மிஸ் பிலிப்பைன்சுக்கு நிகராக இவரை தங்களது நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யக் காத்திருக்கிறது பல விளம்பர நிறுவனங்கள்.
இந்நிலையில், மிஸ் கொலம்பியாவை அமெரிக்காவின் பிரபல பார்ன் (Porn) பட நிறுவனங்களும் விட்டுவைக்கவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த விவிட் எண்டர்டெயின்மெண்ட் பார்ன் ஸ்டூடியோ (Vivid Entertainment porn studio) தங்களது ஆபாசப் படத்தில் நடிக்கும் படி, 1 மில்லியன் அமெரிக்க டாலரோடு (4.2 மில்லியன் ரிங்கிட்), அட்ரியாட்னாவின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளதாக ‘த ஹஃபிண்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
விவிட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஹிர்ஸ்ச், அட்ரியாட்னா கூடிரர்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“நீங்கள் உங்களுக்கு விருப்பப்படும் பார்ட்னரையும், விருப்பப்படும் உடலுறவு முறையையும், எத்தனை படங்களில் தோன்றவுள்ளீர்கள் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம்” என்று தெரிவித்துள்ளதாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்தக் கடிதத்திற்கு அட்ரியாட்னா என்ன பதிலளித்துள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை.
கடந்த 1987 -ம் ஆண்டு முதல் தற்போது வரை, பமீலா ஆண்டர்சன் தொடங்கி பல பிரபலங்களை வைத்து பார்ன் திரைப்படங்களை எடுத்தவர்கள் தான் இந்த விவிட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.