Home Featured நாடு நீலாயைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளிக்கு தீ வைப்பா? – அதிகாரிகள் சந்தேகம்!

நீலாயைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளிக்கு தீ வைப்பா? – அதிகாரிகள் சந்தேகம்!

800
0
SHARE
Ad

ARSONநீலாய் – நீலாயைச் சேர்ந்த டேசா செம்பாக்கா தமிழ்ப் பள்ளியில் இன்று அதிகாலை நெருப்பு பற்றியதற்குக் காரணம் யாராவது அதற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், “எஸ்ஜெகேடி டேசா செம்பாக்கா (SJKT Desa Cempaka) வில் இன்று அதிகாலை 2.25 மணிக்கு நெருப்பு பற்றியதற்குக் காரணம், யாரேனும் தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் அடைகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவத்தில் பள்ளியின் கதவுகள், சன்னல்கள், கூரை, பக்கவாட்டுச் சுவர் ஆகியவற்றுடன் முக்கியமான ஆவணங்களும், புத்தகங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படை 10 நிமிடங்களில் நெருப்பை அணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.