Home Featured நாடு “டிச 31-ம் தேதிக்குள் பிரிம் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யுங்கள்” – நஜிப்

“டிச 31-ம் தேதிக்குள் பிரிம் உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யுங்கள்” – நஜிப்

591
0
SHARE
Ad

semak+br1mகோலாலம்பூர் – அடுத்த ஆண்டு ஒரே மலேசியா உதவித்தொகை (BR1M) பெறத் தகுதியானவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்துவிடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

https://ebr1m.hasil.gov.my/ என்ற இணையதளத்தின் வாயிலாக அதற்கான விண்ணப்ப பாரத்தை அடைந்து, அங்கு தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து அனுப்பலாம் அல்லது நகர்புற உருமாற்று மையங்களுக்குச் சென்று அங்கு நேரடியாகவும் விண்ணப்பப் பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

“விண்ணப்பப் பாரம் முழுமையாக இருப்பதோடு, நீங்கள் அதற்குத் தகுதியானவராக இருந்தால், பிரிம் உதவித்தொகை வரும் ஜனவரி 28-ம் தேதி வழங்கப்படும்” என்று நஜிப் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice