அப்போது, அவரது மேடைக்கு எதிராக, நிழற்குடை ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதாகை (பேனர்) இருந்தது. அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், தன் தொண்டர்களிடம், “அந்த அம்மாவின் பேனரைக் கிழி” என உத்தரவிட்டார். தொண்டர்களும் பதாகையை கிழித்தனர்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிமுக தொண்டர்கள், தஞ்சை முழுவதும் உள்ள விஜயகாந்தின் பதாகைகளை கிழித்து வருகின்றனர். இதன் காரணமாக, இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments