Home Featured நாடு ஜசெக எம்பி: கேஎல்ஐஏ-வில் கூட சிலுவைத் தோற்றம் தெரிகிறது – அதையும் இடிப்பீர்களா?

ஜசெக எம்பி: கேஎல்ஐஏ-வில் கூட சிலுவைத் தோற்றம் தெரிகிறது – அதையும் இடிப்பீர்களா?

589
0
SHARE
Ad

கோலாலம்பூர் – லங்காவியில் புதிதாகக் கட்டப்பட்ட வீடமைப்பு ஒன்றில், வீட்டின் கூரையின் மேல் சிலுவை போன்று தோற்றம் அளிக்கும் வகையில், காற்றுக் குழாய்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைக்கு ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

KLIA_Aeropolis_masterplan_wiki_620_413_100

(கேஎல்ஐஏ விமான நிலையத்தின் ‘ஏரியல் வியூ’ தோற்றம்)

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நானும் அதை பேஸ்புக்கில் படித்தேன். கேஎல்ஐஏ விமானம் நிலையம் கூட தான் மேலிருந்து பார்க்கும் போது சிலுவை போன்ற தோற்றம் தருகின்றது. அதற்காக அது இடிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தைக் கிளப்பிய சில தனிப்பட்ட நபர்களுக்கு கண்களில் பாதிப்பு இருக்கலாம் என்று லிம் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

வீட்டின் கூரையின் மேல் சிலுவை போன்ற தோற்றம் அளிப்பதாக அதைப் படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்ட சிலர், வீடமைப்பு நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அச்சிலுவை போன்ற தோற்றத்தை மறைக்க அதன் மேல் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.