Home நாடு “செனட்டர் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள்” கெராக்கானுக்கு அறைகூவல்

“செனட்டர் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள்” கெராக்கானுக்கு அறைகூவல்

965
0
SHARE
Ad
லிம் லிப் எங் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கெராக்கான் கட்சி, தேசிய முன்னணி சார்பாகப் பெற்ற நாடாளுமன்ற மேலவை (செனட்டர்) உறுப்பினர்களின் பதவிகளிலிருந்தும், மற்ற அரசுப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டும் என்ற ஜசெகவின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அறைகூவல் விடுத்துள்ளார்.

கெராக்கான் கட்சி தற்போது இரண்டு செனட்டர்களைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர் மாநகரசபையின் ஆலோசனை மன்றத்திலும் தனது பிரதிநிதியை கெராக்கான் கொண்டுள்ளது.

மேலும் பல அரசு சார்பு நிறுவனங்களிலும் கெராக்கான் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தப் பதவிகள் அனைத்திலும் இருந்து கெராக்கான் பிரதிநிதிகள் விலக வேண்டும் எனவும் லிம் லிப் எங் கேட்டுக் கொண்டார்.