Home நாடு தேசிய முன்னணியிலிருந்து கெராக்கானும் விலகுகிறது

தேசிய முன்னணியிலிருந்து கெராக்கானும் விலகுகிறது

1148
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை கெராக்கான் கட்சி எடுத்திருக்கிறது. இன்று நடைபெற்ற கெராக்கான் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது.

கெராக்கான் அடிமட்ட உறுப்பினர்களின் மனோ நிலை, உணர்வுகள் ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டொமினிக் லாவ் அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி மூன்றே கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக சுருங்கியிருக்கிறது. அதே வேளையில், அம்னோ, மசீச, மஇகா என்ற இந்த மூன்று கட்சிகள்தான் 1957-ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஒன்றாக இணைந்து அலையன்ஸ் எனப்படும் மூன்று கட்சிகளின் கூட்டணியை உருவாக்கிப் பொதுத் தேர்தல்களில் பங்கேற்றன.

#TamilSchoolmychoice

பின்னர் 1974-இல் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, சில சீரமைப்புகள் செய்யப்பட்டு, தேசிய முன்னணி என்ற புதிய கூட்டணி துன் ரசாக்கால் தொடக்கி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த மூன்று கட்சிகளுடன் தங்களின் அரசியல் பயணத்தை மீண்டும் தொடக்க வேண்டிய – தொடர வேண்டிய – நிலைமைக்கு தேசிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது.