Home நாடு அமைச்சரவையில் சேவியர் ஜெயகுமார், சிவராசா, வேதமூர்த்தி!

அமைச்சரவையில் சேவியர் ஜெயகுமார், சிவராசா, வேதமூர்த்தி!

2369
0
SHARE
Ad
சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர் – விரைவில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கான இறுதிக் கட்ட அமைச்சரவைப் பட்டியலில் பிகேஆர் கட்சியின் சார்பான இந்திய அமைச்சராக சேவியர் ஜெயகுமார் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான சேவியர் ஜெயகுமார் மூன்றாவது இந்திய அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெறுவார் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக சேவியர் ஜெயகுமார் நியமிக்கப்படக் கூடும்.

அதே வேளையில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சிவராசா துணையமைச்சராக நியமிக்கப்படுவதும் உறுதியாகியிருப்பதாக ஊடக ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஜசெக சார்பிலான ஓரிரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணையமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

வேதமூர்த்தியும் அமைச்சரா?

இதற்கிடையில், பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது இந்திய வாக்குகளைக் கவர்வதில் முக்கியப் பங்காற்றிய ஹிண்ட்ராப் தலைவரான வேதமூர்த்தியும் (படம்) இந்திய விவகாரத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவர் பிரதமர் துறையில் துணையமைச்சராக நியமிக்கப்படுவரா அல்லது முழு அமைச்சராகவே நியமிக்கப்படுவாரா என்பது இதுவரை தெரியவில்லை.

இந்தியர்களுக்கான விவகாரங்களுக்காக தனி அமைச்சு அல்லது இலாகா ஏற்படுத்தப்பட்டு அதற்கு வேதமூர்த்தி பொறுப்பேற்பார் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.