Home நாடு புதிய அமைச்சர்கள் யார்? பொறுப்புகள் என்ன?

புதிய அமைச்சர்கள் யார்? பொறுப்புகள் என்ன?

1288
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – எந்த நேரத்திலும் நம்பிக்கைக் கூட்டணியின் இரண்டாவது கட்ட அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் யாருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்பது குறித்தும், யாருக்கு எந்த அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என்பது குறித்தும் ஊடகங்களில் ஆரூடங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

இந்திய அமைச்சர்கள் யார் என்ற ஆரூடங்கள் ஒருபுறமிருக்க மற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக நியமிக்கப்படுபவர்கள் யார் என்ற ஆரூடங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த ஆரூடங்களின்படி பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவர் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற ஆரூடங்களும் வெளியாகியிருக்கின்றன:

  • சைபுடின் அப்துல்லா (பிகேஆர்) – வெளியுறவு அமைச்சர்
  • சைபுடின் நசுதியோன் (பிகேஆர்) – உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சர்
  • பாரு பியான் (சரவாக் பிகேஆர்) – பொதுப் பணி அமைச்சர்
  • இயோ பீ யின் (பாக்ரி-ஜசெக) – பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் நீர்வள அமைச்சு
  • தெரசா கோக் (செபுத்தே – ஜசெக) – சுற்றுலாத் துறை அமைச்சு
  • காலிட் சாமாட் (ஷா ஆலாம்-அமானா) – கூட்டரசுப் பிரதேச அமைச்சர்
  • முஜாஹிட் யூசுப் ராவா (பாரிட் புந்தார்-அமானா) – பிரதமர் துறை அமைச்சர்
  • சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் (மூவார்-பெர்சாத்து)
#TamilSchoolmychoice

தற்போது மாமன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்தப் பட்டியல் எதிர்வரும் வாரத்தில் துன் மகாதீரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்போதுதான் இறுதி நிலவரம் தெரியவரும்.