கோலகங்சார் – பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்கள கருக்குலத்தின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய ‘அருந்தமிழ்ப் புலவர் ‘, ‘தனித்தமிழ் மழவர்’ தமிழ்த்திரு குழ. செயசீலனார் (படம்) அவர்கள் நேற்று 23.6.2018 (சனிக்கிழமை) இயற்கை எய்தினார் என்பதை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளனர்.
மலேசியத் தமிழ் உலகில் நன்கு அறிமுகமான, 71 வயதான தமிழ்த்திரு. குழ. செயசீலன் எனும் வெற்றிநெறியர் மறைவு குறித்து பலரும் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
அன்னாரின் இறுதி மரியாதை 25.6.2018 (திங்கட்கிழமை) காலை மணி 10.30 அளவில் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:
எண் 74, ஹய்லண்ட் பார்க்,
ஜாலான் சுல்தான் இஸ்கண்டார் ஷா,
33000 கோலக்கங்சார், பேராக்
அதனைத் தொடர்ந்து, சிறப்பு வழிபாடு செயிண்ட் பெட்ரிக் தேவாலயத்தில் நடைபெறுவதோடு பிற்பகல் 2.30 மணி அளவில் அன்னாரின் நல்லுடல் ஈப்போ, பெர்ச்சாம் மின்சுடலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படும் எனவும் அவரது பிரிவால் துயருறும் அவரது துணைவியார் திருமதி. தேவிஸ் செயசீலன் (காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்) தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்புக்கு:
திரு.செ.கிளமென்ஸ்
012 3765510
குமாரி. செ.அன்னம்
012 3719414