Home Featured நாடு திரெங்கானு, பகாங்கில் அதிகரித்து வரும் வெள்ளம் -1755 பேர் பாதிப்பு!

திரெங்கானு, பகாங்கில் அதிகரித்து வரும் வெள்ளம் -1755 பேர் பாதிப்பு!

513
0
SHARE
Ad

ktfloods281215 11திரெங்கானு – ஒரே இரவில் திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 1755 பேர் இன்று முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

திரெங்கானுவில் 4 மாவட்டங்களில் இருந்து 503 குடும்பங்களைச் சேர்ந்த 1,704 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கெமாமன் மாவட்டத்தில் தான் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், உலு திரெங்கானுவில் 474 பேரும், டுங்குனில் 231 பேரும், மாராங்கில் 8 பேரும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாநிலத்தின் வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பகாங் மாநிலத்தில் குவாந்தான் பகுதியில் இன்று காலை 11 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், நேற்று மாலை 9 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.