Home Featured உலகம் பாரிஸ் தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் உட்பட 10 ஐஎஸ் தலைவர்கள் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்!

பாரிஸ் தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் உட்பட 10 ஐஎஸ் தலைவர்கள் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்!

555
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512வாஷிங்டன் – அமெரிக்கக் கூட்டுப் படைகள் கடந்த சில நாட்களாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் இயங்கி வந்த சிரியா, ஈராக் பகுதிகளில் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 10 முக்கிய ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பாரிஸ் தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் எனக் கருதப்படும் நபரும் ஒருவனாவான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் வான்வழித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர்.

பாரிஸ் தாக்குதலில் முக்கிய நபராகச் செயல்பட்டவன் அப்துல்ஹாமிட் அபோட் என்ற பெல்ஜிய நாட்டுக்காரன் ஆவான். இவனுடன் நெருங்கிய நேரடித் தொடர்புடைய சாராஃப் அல் மௌடான் (Charaffe al Mouadan)  என்ற சிரியாவைத் தளமாகக் கொண்ட ஐஎஸ் தலைவன்தான் டிசம்பர் 24ஆம் தேதி நடந்த ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஐஎஸ் திட்டமிட்டு நடத்திய பாரிஸ் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த சாராஃப் பாரிஸ் தாக்குதல் திட்டமிடலில் சம்பந்தப்பட்டிருந்தான் என்பதும் மேற்கத்திய நாடுகள் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டங்கள் தீட்டி வந்தான் என்பதும் புலனாய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் கடந்த சில வாரங்களாக நடத்தி வந்த தாக்குதல்களின் பலனாக, ஐஎஸ் அமைப்பின் முக்கிய மூளையாகவும், தலைமைப் பொறுப்புகளிலும் செயல்பட்ட பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள காரணத்தால், இனி அந்த இயக்கம் சரியான, ஒழுங்குபடுத்தப்பட்ட தலைமை இல்லாமல் இயங்குவதற்கு சிரமப்படும் என்றும் நம்பப்படுகின்றது.

இதற்கு முன் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் ஜிஹாடி ஜோன் என்ற மற்றொரு முக்கிய ஐஎஸ் தலைவன் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.