Home Featured தமிழ் நாடு “இனிமேல் அவர் விஜயகாந்தூ! கலைஞர், வைகோ தூரமாக நின்று பேச்சுவார்த்தை நடத்துங்கள்” – அன்புமணி கிண்டல்!

“இனிமேல் அவர் விஜயகாந்தூ! கலைஞர், வைகோ தூரமாக நின்று பேச்சுவார்த்தை நடத்துங்கள்” – அன்புமணி கிண்டல்!

640
0
SHARE
Ad

anbumaniதர்மபுரி: பத்திரிக்கையாளர்களைப் பார்த்து காறித் துப்பிய விஜயகாந்தை நோக்கி கண்டனக் கணைகள் எங்கும் பாய்ந்து கொண்டிருக்கும் வேளையில், “மக்கள் இனிமேல் விஜயகாந்த்தை, விஜயகாந்தூ என்றே அழைப்பார்கள்” என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப் பட்டுள்ளவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கேள்வி கேட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் காறித் துப்பி அநாகரீகமாக நடந்து கொண்ட விஜயகாந்த் குறித்து இன்று தர்மபுரியில் செய்தியாளர்கள் டாக்டர் அன்புமணியிடம் கருத்து கேட்டனர்.

அதற்குப் பதிலளித்தபோதுதான் அன்புமணி மேற்கண்ட கருத்தைக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அதேவேளையில் கலைஞர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை. விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பவர்கள் தூரமாக நின்றே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் கிண்டலாகக் கூறியுள்ளார் அன்புமணி.