Home Featured உலகம் ஆபாசப் படத்தில் நடிக்கத் தயார் – மிஸ் கொலம்பியா அறிவிப்பு!

ஆபாசப் படத்தில் நடிக்கத் தயார் – மிஸ் கொலம்பியா அறிவிப்பு!

915
0
SHARE
Ad

ariadna-gutierrez (2)வாஷிங்டன் – சர்ச்சைகளுடன் நடந்து முடிந்த உலக அழகிப் போட்டியில், நூலிழையில் உலக அழகிப் பட்டத்தை தவற விட்ட, மிஸ் கொலம்பியா அட்ரியாட்னா கூடிரர்சுக்கு பிரபல ஆபாசப் பட நிறுவனமான விவிட் எண்டர்டெயின்மெண்ட் பார்ன் ஸ்டூடியோ (Vivid Entertainment porn studio), தங்களது ஆபாசப் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் தரத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த வாய்ப்பு குறித்து அட்ரியாட்னா கூறுகையில், “ஆபாசப் படத்துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்க இருப்பது, எனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். மிக மகிழ்ச்சியுடன் அந்நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விவிட் நிறுவனம் அட்ரியாட்னாவை வைத்து ‘2 கேர்ள்ஸ் 1 கிரவுன்’ (2 Girls 1 Crown) என்ற பெயரில் படத்தை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

இது தொடர்பான அறிவிப்பு, லட்டின் டைம்ஸ் (Latin Times) என்ற செய்தி நிறுவனத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.