Home வாழ் நலம் நோயாளி விழித்திருக்கும் போதே மூளை அறுவை சிகிச்சை – மலேசிய தேசிய பல்கலைக்கழகம் புதிய சாதனை

நோயாளி விழித்திருக்கும் போதே மூளை அறுவை சிகிச்சை – மலேசிய தேசிய பல்கலைக்கழகம் புதிய சாதனை

898
0
SHARE
Ad

1கோலாலம்பூர், மார்ச்.14- மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த (Universiti Kebangsaan Malaysia Medical Centre) நரம்பியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று நோயாளி விழிப்பு நிலையில் இருக்கும் போதே மூளை அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.

இதில் அதிசயம் என்னவென்றால், அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளி பூரண குணமடைந்ததோடு ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று அந்நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிசய மூளை அறுவைச் சிகிச்சை கிரானியோதொமி அவேக் ‘craniotomy Awake’ என்று அழைக்கப்படும். இதனை கடந்த 8.2.2013-ஆம் தேதி மூளை அறுவைச் சிகிச்சை நிபுணராகிய விரிவுரையாளர் டாக்டர் ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார். அவருக்கு உதவியாளராக மூன்று நரம்பியல் வல்லுநர்களான டாக்டர் தோ சார்ங் ஜெங், டாக்டர் ஷன்முகராஜா த/பெ பரமஸ்வரன் மற்றும் டாக்டர் அய்னுல் ஜாபார் மற்றும் உணர்வு இழப்பு (எனெஸ்தெடிக்)  நிபுணர் ஏசா கமருசமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மூளையில் உள்ள கட்டியை அகற்றும் இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மலேசிய வரலாற்றில் ஒரு புதிய சாதனையை  மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நிகழ்த்தியுள்ளது.