Home Featured உலகம் சீனாவில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 17 பேர் பலி!

சீனாவில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 17 பேர் பலி!

551
0
SHARE
Ad

yinchuan-mapஇன்சுவான் – சீனாவின் வட பகுதியில் உள்ள இன்சுவான் நகரில், இன்று காலை பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

bus-on-fireதீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைத்தனர். ஆனாலும், அதற்குள் பேருந்து முழுவதிலும் தீ பரவியதால், பயணிகளைக் காப்பாற்ற முடியவில்லை. பேருந்தில் தீ பற்றியது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. எனினும், இதுவரை பேருந்து தீ பிடித்ததற்கான காரணங்கள் தெரியவில்லை.