Home Featured வணிகம் மலேசியா ஏர்லைன்ஸ் பயணப் பெட்டிகளின் கட்டுப்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின!

மலேசியா ஏர்லைன்ஸ் பயணப் பெட்டிகளின் கட்டுப்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின!

589
0
SHARE
Ad

Malaysia-Airlines1கோலாலம்பூர் – ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணப் பெட்டிகள் கொண்டு செல்வதில் நேற்று தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று இரவு முதல் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

“கோலாலம்பூரில் இருந்து லண்டன், பாரிஸ், ஆம்ஸ்டெர்டாம் செல்லும் விமானங்கள் இன்று (ஜனவரி 6) இரவு முதல் வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதோடு, பயணிகளின் பயணப் பெட்டியில் விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது”

“அதன்படி, இன்று இரவு முதல் சிக்க வகுப்புப் பயணிகள் 30 கிலோ எடையும், முதல் வகுப்புப் பயணிகள் 40 மற்றும் 50 கிலோ எடையும் கொண்டு செல்லலாம்” என்று மலேசியா ஏர்லைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice