Home Featured நாடு நிறுவன செயலாளர் எஸ்.நடராஜா காலமானார்!

நிறுவன செயலாளர் எஸ்.நடராஜா காலமானார்!

638
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – தலைநகரில்  “ஸ்ட்ரெயிட் மேனேஜ்மண்ட் செர்விசஸ்”  என்ற பெயரில் பிரபலமான நிறுவனச் செயலாளர் (கம்பெனி செக்ரட்டரி) சேவைகளை வழங்கும் நிறுவனம் நடத்தி வந்த எஸ்.நடராஜா கடந்த திங்கட்கிழமை ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் காலமானார்.

Nada (late) - Co Secretaryஒரு வழக்கறிஞருமான நடராஜா, நிறுவனச் செயலாளர் சேவைகளை வழங்குவதில் ஆர்வம் கொண்டு, அந்த சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றை நீண்ட காலம் நடத்தி வந்தார்.

57 வயதான நடராஜா, மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர் என்பதோடு, அந்நிறுவனம் பிரச்சனைகளைச் சந்தித்தபோது, ஒரு பங்குதாரர் என்ற முறையில் பல முனைகளிலும் பங்குதாரர்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம், ஒரு வணிகம் தொடர்பாக சென்னை சென்றிருந்த நடராஜா உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை காலை 11 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை, எண்: 378, ஜாலான் 5/54, பெட்டாலிங் கார்டன், 46000 பெட்டாலிங் ஜெயா, என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் அவரது நல்லுடல் பூச்சோங், 14வது மைலில் உள்ள எம்பிஎஸ்ஜே (MPSJ) மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

பாரா (012-2275020)

சங்கரி (016-8990132)

விக்னேசன் (012-2341436)