புது டெல்லி – இந்தியாவின் மதசகிப்புத்தன்மை குறித்து கடந்த சில மாதங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்தினை நடிகர் அமீர்கான் தெரிவித்ததால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இந்நிலையில், இந்திய அரசின் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ (Incredible India) பிரச்சாரத்தின் தூதுவர் பதவியில் இருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது நீக்கம் குறித்து வெளிப்படையான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தூதுவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘இன்க்ரெடிபிள் இந்தியா’ என்பது, இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முக்கிய பிரச்சாரமாகும்.