பகாங் – பகாங் மாநிலத்தில் நடைபெற்று வரும் பாக்சைட் சுரங்கப் பணிகளுக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.
இது குறித்து இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறுகையில், இந்தத் தடை காலத்தில் குவாந்தான் துறைமுகத்தில் உள்ள பாக்சைட் கிடங்குகள் மற்றும் மற்ற 11 பகுதிகள் தூய்மைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தடை காலத்தில், பாக்சைட் கிடங்குகளில் இருந்து ஏற்றுமதிகள் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சுரங்கப் பணிகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், சட்டவிரோதமான சுரங்கப் பணிகளை நிறுத்தவும் அரசாங்கம் அனுமதி வழங்குகளில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.