Home உலகம் சவுதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணின் மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணின் மரண தண்டனை நிறைவேற்றம்

1020
0
SHARE
Ad

Slider-Saudi-mapசவுதி,ஜன.10 – சவுதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவருக்கு அவருடைய  தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை, திரிகோணமலை முதூரைச் சேர்ந்த ரிஸ்வானா என்ற பெண் கடந்த 2005ஆம் ஆண்டில், சவுதியில் ஒரு வீட்டில் பணியில் இருந்தார். அப்போது, அந்த வீட்டின் நான்கு மாதக் குழந்தையின் மரணத்துக்கு இவர் காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரிஸ்வானாவுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், ரிஸ்வானாவுக்கு 17வயது தான் ஆகிறது. அதனால் அவர் மீது கருணை காட்டுமாறு இலங்கை அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ரிஸ்வானாவின் குடும்பத்தினரும் சவுதி அரசருக்கு கருணை மனு அனுப்பினர். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ரிஸ்வானவுக்கு தண்டனைக் குறைப்பு செய்யுமாறு  கோரிக்கை வைத்ததன.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், நேற்று ரிஸ்வானாவின் மரண தண்டனை தலையை துண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.