Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டுக்கு பாதிப்பு வராது – மத்திய அமைச்சர் உறுதி!    

ஜல்லிக்கட்டுக்கு பாதிப்பு வராது – மத்திய அமைச்சர் உறுதி!    

707
0
SHARE
Ad

jallikkattuசென்னை – தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு பீட்டா (விலங்குகள் நலவாரியம்) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் ஆணைக்கு தடை கோரும் விதமாக உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அந்த அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கும் விதமாக விலங்கு நலவாரியம், நீதிமன்றம் சென்றாலும் ஜல்லிக்கட்டுக்கு பாதிப்பு வராது என மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.