Home நாடு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டுக்கொள்ள போக்குவரத்துத்துறை வேண்டுகோள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டுக்கொள்ள போக்குவரத்துத்துறை வேண்டுகோள்

588
0
SHARE
Ad

மலாக்கா, மார்ச் 14 – மலாக்காவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வந்து மீட்டுக்கொள்ளுமாறு அம்மாநில சாலைப் போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிகழ்வு, அடுத்தவாரம் புதன் கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை புக்கிட் ஜாலில் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும்.

அதன்படி வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தி வாகனங்களை மீட்டுக்கொள்ளலாம்.தற்போது அங்கு 208 இரு சக்கர வாகனங்களும், 48 கார்களும், 8 லோரிகளும் மற்றும் 6 வேன்களும் உள்ளதாக அதன் இயக்குனர் முகமத் ஹஸ்ஸான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, கீழ்க்காணும்  எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிராவதி அபுபக்கர் – 06-2346127

ஹஸியன் மின்காட் – 06-2328721.