Home அரசியல் தியான் சுவா ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

தியான் சுவா ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம்

594
0
SHARE
Ad

Tian_Chua-TMIகோலாலம்பூர், மார்ச் 14 – பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, சபா விவகாரத்தில் அம்னோவிற்கு எதிராக கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக இன்று காலை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது அவரது ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

இச்சம்பவம் இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. தியான் சுவா மற்றும் அவரது ஆதரவாளர்கள், நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருக்கும் இடைவேளையில் நீதிமன்ற வளாகத்திலுள்ள உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் தியான் சுவாவை காவலில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு அவரது வழக்குரைஞர்களான லத்தீபாவும், என்.சுரேந்தரனும் மறுத்துள்ளனர். ஆனால் தொடர்ந்து காவல்துறையினர் முயற்சிக்கவே, தியான் சுவா ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.