Home Featured நாடு “ஜிஎஸ்டி நாட்டின் பாதுகாவலன்” – நஜிப் பெருமிதம்!

“ஜிஎஸ்டி நாட்டின் பாதுகாவலன்” – நஜிப் பெருமிதம்!

608
0
SHARE
Ad

najib_reutersகோலாலம்பூர் – “எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் இந்த வேளையில், ஜிஎஸ்டி தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையின் பாதுகாவலான விளங்கி வருகிறது” என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டி மூலம் சேகரிக்கப்படும் பணம், பிரிம் (BR1M), குழந்தைகளுக்கான அடிப்படை இலவசக் கல்வி, மிகக் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நிதி நிலை ரீதியிலான உதவிகளுக்குப் பெரிதும் பயன்படுகிறது.”

“எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையிலும், அரசின் வருவாய் சீராக இருப்பதற்கு ஜிஎஸ்டி பெரிதும் கைகொடுக்கிறது. நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்னவென்றால், சரியான நிதி வளங்கள் இல்லை என்றால், மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை செயல்படுத்த முடியாது.”

#TamilSchoolmychoice

“மக்களுக்கு ஒன்றை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும் என்றால், 2016-ம் நம் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த சூழலில், ஜிஎஸ்டி நாட்டின் பாதுகாவலன் என்று கூறினால் அது மிகையாகாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.