Home Featured நாடு “பக்காத்தான் வரும் போகும் – ஆனால் பாஸ் நிலைத்து நிற்கும்” – ஹாடி கருத்து!

“பக்காத்தான் வரும் போகும் – ஆனால் பாஸ் நிலைத்து நிற்கும்” – ஹாடி கருத்து!

598
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – எதிர்கட்சிக் கூட்டணி வரும் போகும், ஆனால் பாஸ் என்றுமே தொடர்ந்து நிலைத்து வருவதை வரலாறு சொல்கிறது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

“(பக்காத்தான்) கூட்டணிகள் ஒன்று புதிதல்ல. பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மற்ற ‘பக்காத்தான்கள்’ அனைத்தும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன. அதில் சில சரிந்தன.”

“சில முற்றிலும் சரிந்து போயின, அவர்களால் மீண்டு வர இயலவில்லை. ஆனால் நாங்கள் தொடர்ந்து எழுச்சியோடு இருந்து வருகின்றோம்” என்று சிலாங்கூர் பாஸ் தேர்தல்கள் தொடர்பாக கோலசிலாங்கூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்  ஹாடி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தலைமைத்துவ உச்சி மாநாட்டில், கூட்டணியில் உள்ள கட்சிகளை அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டன. அதில் பாஸ் கட்சியின் இருப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

அதனைத் தொடர்ந்து நேற்று சிலாங்கூர் பாஸ் தேர்தல்கள் குறித்த கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கண்டார் அப்துல் சமத், அம்னோவிற்குப் பிறகு அமனா தான் பாஸ் கட்சியின் புதிய எதிரி என்று தெரிவித்துள்ளார்.

வரும் பொதுத்தேர்தலில் அமனாவிற்கு எதிராகத் தான் பாஸ் கட்சி களமிறங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பக்காத்தான் ராக்யாட்டுடனான முறிவிற்குப் பிறகு பாஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த சில தலைவர்கள் அமனா நெகாரா கட்சியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமனா நெகாரா எதிர்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.