Home Featured கலையுலகம் விஜயகுமார் ஐபிஎஸ்-ன் கதையா தெறி?

விஜயகுமார் ஐபிஎஸ்-ன் கதையா தெறி?

1282
0
SHARE
Ad

CYmb6lvUsAQeshAசென்னை – விஜய் நடிப்பில், ‘ராஜா ராணி’ அட்லீ இயக்கி வரும் ‘தெறி’ படத்தின் கதை குறித்து தற்போது நட்பு ஊடகங்களில் சூடான விவாதங்கள் கிளம்பி உள்ளன. தெறி படத்தில் விஜயின் பெயர் விஜயகுமார் ஐபிஎஸ் என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்த வந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் விவகாரம், விஜயகுமார் ஐபிஎஸ் தலைமையேற்ற பிறகு தான் முடிவிற்கு வந்தது. வீரப்பன் விவகாரத்திற்குப் பிறகு விஜயகுமார் பல்வேறு பொறுப்புகள் வகித்தார்.

CYmb7S3VAAAkQLcஅவரின் காவல்துறை வாழக்கையில், ஒரு பகுதி தான் தெறி படம் என்று சினிமா வட்டாரங்களில் ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.