Home Featured நாடு கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!

கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!

720
0
SHARE
Ad

s.ananthanஅலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் எஸ்.ஆனந்தன், கெடா மாநில மஇகா தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் என்பதோடு, மஇகா கூலிம் பண்டார் பாரு தொகுதித் தலைவருமாவார்.

கெடா மாநில சுல்தானின் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது பெறும் இந்தியப் பிரமுகர்களில் மற்றொருவர் மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணை அமைச்சருமான பி.கமலநாதன் ஆவார்.

#TamilSchoolmychoice