பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் தான், சுப்பிரமணிய சுவாமி மேற்கூறிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் அமீர்கானின் அறிக்கைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் இணைந்து செயல்படுகிறார். அவர் நடிக்கும் திரைப்படத்தை பிரபலப்படுத்த, அனைத்து வேலைகளையும் ஐஎஸ்ஐ செய்கிறது. இதுதொடர்பாக அவர், இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தை, இதற்கு மேல் விரிவாக பேச விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.