சென்னை – முதல்வர் ஜெயலலிதா கருணாநிதி மீது தொடங்கிய அவதூறு வழக்கில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வழக்கு வரும் மார்ச் மாதம் 10-ம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இதற்கிடையே தேர்தல் சமயத்தில், மக்கள் கவனமும், ஊடகங்களின் கவனமும் தம் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காகவே கருணா, இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகிறார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல், கருணாநிதியின் நீதிமன்ற வருகை உள்ளூர் ஊடகங்கள் முதல் தேசிய ஊடகங்கள் வரை முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது. தங்கள் தலைவர் முதுமையிலும் வழக்குகளை நேரடியாக சந்திக்கிறார் என திமுக தொண்டர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.