Home Featured கலையுலகம் சரத்குமார், ராதாரவி மீது காவல்துறையில் புகார் – நடிகர் சங்கம் அறிவிப்பு!

சரத்குமார், ராதாரவி மீது காவல்துறையில் புகார் – நடிகர் சங்கம் அறிவிப்பு!

715
0
SHARE
Ad

vishal team longசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி, பதவிக்காலத்தில் தாங்கள் நிர்வகித்த கணக்குகளை புதிய நிர்வாகிகளிடம், சரியாக ஒப்படைக்காததால், அவர்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்க இருப்பதாக சங்கத்தின் தற்போதய தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின், 4-வது செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின், நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:-

“நடிகர் சங்க கணக்குகளை, மூன்று மாதமாகியும் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி சரியாக ஒப்படைக்கவில்லை. இதனால், பொதுக்குழுவை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றி, முன்னாள் நிர்வாகிகளிடம் பல முறை தெரிவித்தும், இதுவரை கணக்குகள் சரியாக வந்து சேரவில்லை. சமீபத்தில், ஒப்படைத்த கணக்குகள் ஒப்புக்கு மட்டுமே தரப்பட்டவை. எனவே, அந்தக் கணக்குகளை அவர்களிடமே திருப்பி அனுப்பி விட்டோம். கணக்குகளை ஒப்படைக்க, அவர்களுக்கு தரப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது. எனவே, அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளோம்”

#TamilSchoolmychoice

“கணக்குகளை ஒப்படைக்கும் வரை, பொதுக்குழுவைக் கூட்டாமல் இருக்க முடியாது என்பதால், தற்காலிகமாக மார்ச் துவக்கத்தில், பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க வளாகத்தில், கட்டிடம் கட்டுவது தொடர்பாக, ‘எஸ்பிஐ சினிமாஸ்’ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம். கட்டிடம் கட்ட, 2.5 கோடி ரூபாய் தேவை. அந்த நிதியை திரட்ட, விரைவில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.