Home Featured உலகம் கொடூரக் கொலைகாரன் ஜிகாதி ஜான் மரணம் உறுதி செய்யப்பட்டது!

கொடூரக் கொலைகாரன் ஜிகாதி ஜான் மரணம் உறுதி செய்யப்பட்டது!

540
0
SHARE
Ad

jihadi johnபெய்ரூட் – ஐஎஸ் இயக்கம் தங்களிடம் சிக்கிய பிணைக் கைதிகளுக்கு எத்தகைய தண்டனைகளை வழங்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். சமீபத்திய வருடங்களில் வெளியான ஐஎஸ் இயக்கத்தின் கொலைக் காணொளிகளில் முகமுடி அணிந்த உருவம் ஒன்று தொடர்ந்து கொடூரமான முறையில் பிணைக்கைதிகளை கொலை செய்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிகாதி ஜான் என்ற குறிப்பிட்ட அந்தக் கொலையாளி, சிரியாவின் வடக்கில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஆரம்பத்தில் ஜிகாதி ஜானின் மரணத்தை மறுத்து வந்த ஐஎஸ் இயக்கத்தினர், தற்போது அதனை உறுதி செய்துள்ளனர்.

தங்கள் இயக்கத்தின் இணைய இதழான தபீக்கில், ஜிகாதி ஜானின் மரணத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.