கோலாலம்பூர் – பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை நீக்கும் பிரச்சாரத்தைத் தான் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புத்ராஜெயாவில் இன்று பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாதீர், “நான் விடப்போவதில்லை, காரணம் இந்த நாட்டிற்கு அது மிகவும் முக்கியம் எனக் கருதுகின்றேன்”
“நஜிப்பின் தலைமைத்துவம் இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகியவற்றில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. எல்லா பிரிவுகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நஜிப் தன்னுடைய புகழை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கிலேயே குறியாக இருப்பதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“வெறும் புகழுக்காக காசு செலவு செய்யப்பட்டுள்ளது. தேசிய முன்னணியின் வெற்றிக்காகவே 2.6 பில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளதை நஜிப்பே ஒப்புக் கொண்டுள்ளார்” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.