Home Featured நாடு ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

1010
0
SHARE
Ad

culex-tarsalis-mosquitoகோலாலம்பூர் – ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மைக்ரோசெப்பேலி (Microcephaly) என்ற பாதிப்பு ஜிக்கா வைரஸ் தொற்றால் தான் ஏற்படுகின்றதா? என்பது பற்றி ஆய்வு முடிவுகள் வெளி வரும்வரை கர்ப்பிணி பெண்கள் குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இருப்பவர்கள், பிரேசிலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மைக்ரோசெப்பேலி (Microcephaly) என்பது குழந்தை சிறிய தலையுடன், மூளை வளர்ச்சி குறைவுடன் பிறப்பது ஆகும்.

#TamilSchoolmychoice

இந்த பாதிப்புடன் கூடிய குழந்தைகள் பிறப்பது அந்நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றது.

இந்த பாதிப்பிற்கான உண்மையான காரணத்தை அறிய பிரேசில் சுகாதார அமைச்சு தீவிரமாக ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளதன் படி, உலகில் அமெரிக்கா உட்பட 17 நாடுகளில் ஜிக்கா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவை, பிரேசில், பார்பாடாஸ், கொலம்பியா, ஈகுவாடர், இஎல் சல்வாடர், பிரெஞ்சு குயானா, குவாட்மாலா, குயானா, ஹைடி, ஹாண்டுராஸ், மாரிடினிகியூ, மெக்சிகோ, புயிர்டோ ரிக்கோ, பாராகுவே, சுரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் ஜிக்கா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஏடிஎஸ் கொசு கடிப்பதால் டிங்கி பரவுவது போல், அதே கொசுவால் ஜிக்கா வைரசும் பரவுகின்றது.