Home Featured உலகம் பாகிஸ்தான் பல்கலைக்கழகத் தாக்குதல்: 30 பேர் பலி உறுதி செய்யப்பட்டது!

பாகிஸ்தான் பல்கலைக்கழகத் தாக்குதல்: 30 பேர் பலி உறுதி செய்யப்பட்டது!

545
0
SHARE
Ad

pakistan2இஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் சர்சட்டா மாவட்டத்தில் உள்ள பாஷாகான் பல்கலைகழகத்திற்குள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 30 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கி நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.