Home Featured நாடு முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவம் வேண்டாம் – கெடா அம்னோ முடிவு!

முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவம் வேண்டாம் – கெடா அம்னோ முடிவு!

965
0
SHARE
Ad

mukrizஅலோர் செடார் – கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கெடா அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தின் அம்னோ துணைத்தலைவர் டத்தோ அகமட் பாஷா மொகமட் ஹனிபா அகமட் ஷா, கிளைத் தலைவர்களுடன் இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நஜிப் துன் ரசாக், கெடா மாநிலத் தலைமைத்துவத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒட்டுமொத்த கெடா அம்னோ தலைமைத்துவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இணைந்து கெடா அம்னோ தலைவரும், மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை என அறிவிக்கின்றோம்” என்றும் அகமட் பாஷா இன்று கிராண்ட் அலோரா தங்கும் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice