Home Featured உலகம் சிங்கப்பூரில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 27 வங்காள தேசத்தினர் கைது!

சிங்கப்பூரில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 27 வங்காள தேசத்தினர் கைது!

920
0
SHARE
Ad

singaporeசிங்கப்பூர்  – சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த 27 வங்காள தேசத்தினர், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அல்-கொய்தா மற்றும் அச்சுறுத்தக் கூடிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.

அவர்களின் கைது குறித்து சிங்கப்பூர் உள் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், “கைது செய்யப்பட்டவர்களில் சில வெளிநாடுகளில் ஜிகாத் வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. என்றாலும், அவர்கள் சிங்கப்பூரில் எத்தகைய தாக்குதலையும் நடத்த திட்டமிடவில்லை. தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.