Home Featured இந்தியா மைக்ரோசாப்ட் நிறுவனர் ஜாப்சா? கேட்சா? – குழம்பிய ராகுல் காந்தி! 

மைக்ரோசாப்ட் நிறுவனர் ஜாப்சா? கேட்சா? – குழம்பிய ராகுல் காந்தி! 

1006
0
SHARE
Ad

rahul_gandhiமும்பை – ராகுல் காந்திக்கும், கல்லூரி மாணவர்களுக்குமான தொடர்பு பல்வேறு யூ-டியூப் காணொளியை பார்க்கும் போது நமக்கே தெரியவரும். என்னதான் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ராகுல் பேசினாலும், ஏதோ ஒருவகையில், அவரது வார்த்தைகளை வைத்தே மாணவர்கள், அவரை மடக்கி கேலி செய்து விடுகின்றனர். இந்த நிகழ்ச்சி சமீபத்திலும் அரங்கேறி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், என்எம்ஐஎம்எஸ் (NMIMS) பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்த ராகுல், இந்திய மாணவர்கள் மைக்ரோசாப்டின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்று முன்னேற வேண்டும் என்று பேசினார்.

அவ்வளவு தான் டுவிட்டரில் ‘ஸ்டீவ்ஜாப்ஸ்ஆப்மைக்ரோசாப்ட்’ (StevejobsofMicrosoft) என்ற பெயரில் டேக்கை உருவாக்கி, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விட்டனர். ‘பப்பூ’ என்று ராகுலுக்கு செல்லப் பெயர் வைத்திருக்கும் டுவிட்டர் வாசிகள், பப்பூ இன்னும் வளரவில்லை என்றும் பதிவுகளை வெளியிட்டு ஒருவழி ஆக்கிவிட்டனர்.

#TamilSchoolmychoice

ராகுலின் ‘அந்த’ காணொளியைக் கீழே காண்க: