Home Featured நாடு தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 24 மணி நேரமும் கேடிஎம் சேவை!

தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 24 மணி நேரமும் கேடிஎம் சேவை!

605
0
SHARE
Ad

ktmb-for-comfort-convenience-speed-02கோலாலம்பூர் –  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நாளை ஜனவரி 22-ம் தேதி முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 24 மணி நேரமும், கேடிஎம் இரயில் சேவை (KTM Komuter services) இயக்கப்படவுள்ளது.

இது குறித்து கேடிஎம் பெர்காட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்துமலையில் இருந்து சிரம்பான் வரையும், ராவாங்கில் இருந்து கிள்ளான் துறைமுகம் வரையிலும் கூடுதலாக 953 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகள் வழக்கமான நேரங்களையும் தாண்டி, நள்ளிரவில் இருந்து அதிகாலை 5.30 மணிவரை 60 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஜனவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில், 20 நிமிடங்களுக்கு ஒரு இரயில் சேவை என அதிகரிக்கப்படுவதாகவும் கேடிஎம் தெரிவித்துள்ளது.