கோலசிலாங்கூர் – கோலசிலாங்கூரில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் டி.எச்.ஆர் ராகாவின் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகா குழுவினர் பொங்கல் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பல போட்டி விளையாட்டுகளை நடத்தினார்கள்.
பின்னர், நண்பகல் 12 மணியளவில் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
#TamilSchoolmychoice
அதுமட்டுமின்றி, அதிர்ஷ்ட குழுக்களும் இந்நிகழ்ச்சியில்இடம்பெற்றது. மக்களுக்குத் தேவையான அடிப்படை மின்சாரப் பொருட்கள் பரிசாக எடுத்து வழங்கப்பட்டது.
டி.எச்.ஆர் ராகாவின் தலைவர் சுப்ரமணியம் வீராசாமி கூறுகையில், #hopecouragestrength பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக எங்களால் முடிந்த வரை மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவும் ஒரே நோக்கத்திற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். இதன் வழி மக்கள் பயனடைவார்கள் என நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், அகிலா, கீதா, ஷாலு, ஜெய் மற்றும் யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.