பெய்ரூட் – சிரியாவில் மிகத் தீவிரமாக இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் சேர்ந்து ரஷ்யா நடத்திய அதிபயங்கரத் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட 1050 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் அதாவது கடந்த செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து, ரஷ்யா நடத்திய தாக்குதலில், அத்தனை அப்பாவிகள் பலியாகி இருப்பதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்து உள்ளது.
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 893 ஐஎஸ் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பலியான அப்பாவிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் தாண்டி உள்ளதால், ரஷ்யாவின் நோக்கம் தீவிரவாதிகளை அழிப்பதா? அல்லது சிரியாவை கைப்பற்றுவதா? என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.