Home Featured கலையுலகம் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ தூதுவர்களாக அமிதாப், பிரியங்கா சோப்ரா நியமனம்!

‘இன்க்ரெடிபிள் இந்தியா’ தூதுவர்களாக அமிதாப், பிரியங்கா சோப்ரா நியமனம்!

755
0
SHARE
Ad

amitabh-priyanka_மும்பை – இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் புதிய தூதுவர்களாக பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளன.

aamir-khanமுன்னதாக ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் தூதுவராக இருந்த நடிகர் அமீர்கான், இந்திய மதசகிப்புத் தன்மை குறித்து விமர்சித்ததால் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், அவரின் பதவி விடுவிப்பு குறித்து இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.